பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் நீதிமன்ற நிறுத்தம் அருகே அரசுபேருந்தில் இருந்து இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-09 05:33 GMT
பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளத்தில் இருந்து திங்கள் நகர் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் இரணியல் நீதிமன்ற நிறுத்தம் அருகே வந்தபோது அரசு பஸ் டிரைவர் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார். அதற்குள் பஸ்ஸில் இருந்த பெண் ஒருவர் கீழே அவசரமாக இறங்க முயன்றதாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறிய அந்தப் பெண் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் இறங்கி வந்து பார்த்தார். அப்போது அந்தப் பெண்ணின் ரத்த காயத்தை பார்த்து டிரைவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் தண்ணீர் தளித்து எழுப்பி விட்டனர். பின்னர் காயம் அடைந்த பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News