மின் இணைப்பு கேட்டு போராடும் பெண் - வீடியோ வைரல்

காளையார் கோவில் அருகே புதிய மின் இணைப்பு வழங்க கோரி போராடும் பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-04-10 07:07 GMT

பாண்டி மீனாள்

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே ஆவரங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டி மீனாள் என்பவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னதாக பழைய வீட்டை புதுப்பித்து ஒரு புதிய வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்க கோரியும், வீட்டின் அருகே உள்ள தாழ்வான மின் கம்பியை வேறு மாற்று பாதை வழியாக செல்வதற்கு பரிந்துரை செய்ய கோரியும், கடந்த பத்து மாதங்களாக மின் இணைப்பு கோரி காளையார்கோவிலில் உள்ள மின் வாரியத்திற்கு சென்று பலமுறை முறையிட்டுள்ளார். அங்கு முறையான பதில் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை மனு கொடுத்துள்ளார். ஆனால் அதற்கும் நடவடிக்கை இல்லாததால் மிகுந்த வேதனையில் தனது வீட்டிற்கு எப்போது வெளிச்சம் வரும் எனறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமுக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News