சாராயம் விற்ற பெண் தடுப்புக் காவலில் கைது
கள்ளகுறிச்சி மாவட்டம், சாராயம் விற்ற பெண் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-05-18 05:24 GMT
சங்கராபுரம் அடுத்த க.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி விஜயா, 42; சாராய வியாபாரி. இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாராயம் விற்று வந்தார். இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., சமய்சிங் மீனா பரிந்துரையை ஏற்று, விஜயாவை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி விஜயா வேலுார் பெண்கள் சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.