திருப்பத்தூர் அருகே விவசாய கிணற்றில் பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் அருகே விவசாய கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.;

Update: 2023-11-28 11:03 GMT

சடலமாக மீட்கப்பட்ட பெண்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் அருகே விவசாய கிணற்றில் பெண்சடலம் மீட்பு! கந்திலி போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர்அடுத்த கீழ்குறும்பர் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகள் தேவி. வயது(39) இவர்ஜோலார்பேட்டை அடுத்து ரெட்டியூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டு 19 வயதில் சார்லதா என்ற பெண் உள்ளது.

இவர் 10 வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவன் வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்! இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவி திடீர் என்று காணாமல் போய் உள்ளார்.

Advertisement

அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்! இந்நிலையில் தேவி அவரது வீட்டிற்க்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

விடியற்காலை மலம் கழிக்க சென்று எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது! கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு கொலையா?தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News