பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகியிடம் பெண்கள் சரமாரி கேள்வி
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திமுக சார்பில் சேலம் திமுக நிர்வாகி கோவிந்தன் குடுகுடுப்பைக்காரன் வேடமடைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரிடம் பொதுமக்கள் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரி முறையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது சேலம் கோவிந்தன் குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது மோடி அரசு பெட்ரோல்,டீசல்,கேஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு ஜிஎஸ்டி வரியால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதலில் ஒயின்ஷாப்பை மூடச் சொல்லுங்க பல உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. வடமாநிலத்தவர் அதிகளவு தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர் ஆனால் தமிழக இளைஞர்கள் படித்தும், ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை எனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்கள் இதையெல்லாம் ஏற்படுத்தி கொடுங்க பின்பு நாங்க ஓட்டு போடுறோம் என ஜக்கம்மா கோவிந்தனிடம் பல்வேறு கேள்விகளை பெண்கள் சராசரியாக கேட்டனர் .இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.