மகளிர் தொழில் முனைவோர் அடையாளம் காணும் முகாம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தொழில் முனைவோர் அடையாளம் காணும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-15 02:03 GMT
திருப்பூர், ஊரக மகளிரின் தொழில்முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டமானது 5 வட்டாரங்களில் 122 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில்முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக்கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை மதி சிறகுகள் தொழில் மையம் மூலமாக ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிற மகளிர் தொழில்முனைவோர்கள் தங்கள் தொழில்களில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்தர சேவைகளையும், ஒரே நிலையத்தில் பெற தகுதியான மகளிர் தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 40 க்கும் மேற்பட்ட மகளிர் இதில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News