ராசிபுரத்தில் பெண் வழக்கறிஞர்கள் மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நீதிமன்றத்தில் வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் மகளிர் தின விழாவை விமர்சையாக கொண்டாடினர்.
உலகம் முழுவதும் மகளிர் தின விழா அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் இதே போல் அரசுத்துறை பணியில் உள்ள பெண்கள், மற்றும் தனியார் துறையில் பணியில் உள்ள பெண்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் மகளிர் தின விழாவை தொடர்ந்து பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நீதிமன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் கேக் வெட்டி உற்சாகமாக மகளிர் தினத்தை வழக்கறிஞர் சிவலீல ஜோதி அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து அரசு பணிமனை அருகே உள்ள ஸ்ரீ வாரி நர்சரி கார்டன் பகுதிக்கு சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் உற்சாகமாக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்கள் சிவலீலஜோதி, மஹேஸ்வரி விஸ்வராஜ், சுபா, சுகந்தி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, ராதா சந்திரசேகரன் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.