பெண் கொலை : தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கும்பகோணத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தையல் தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2024-04-28 02:32 GMT

பைல் படம் 

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டி. சரவணன் (44). தையல் தொழிலாளி. இவர் 2014, ஜூன் 26 ஆம் தேதி குடி போதையில் வீட்டுக்கு சென்று, வெளியில் தகராறு செய்தார். இது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி தமிழ்ச்செல்விக்கும் (60) தகராறு ஏற்பட்டது.  இதில், தமிழ்ச்செல்வியை சரவணன் கத்தியால் குத்தினார்.

இதனால் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இது குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனர்.  இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News