சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்!!
சாலையில் கழிவுநீர் குளம் போல தேங்கியதை கண்டித்தும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Desk
Update: 2024-07-05 06:41 GMT
Roadblock
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு, நாராயணசாமி தெரு சந்திப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, நேற்று காலை அப்பகுதி பெண்கள் டிகாஸ்டர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் நீண்ட நேரமாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, திருவிக நகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பொறுப்பு துணைப் பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரிகளை பயன்படுத்தி உடனடியாக கழிவு நீரை அகற்றினர்.