சேலம் கோர்ட்டில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி கிறிஸ்டல் பபிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவருக்கு பெண் வக்கீல்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி அதனை நீதிபதிக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பதிலுக்கு நீதிபதியும் பெண் வக்கீல்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார். இதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், வணிக நீதிமன்ற சார்பு நீதிபதி ரேணுகாதேவி, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து பெண் வக்கீல்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், வக்கீல்கள் தமயந்தி, ஜனார்த்தனன், இமயவரம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.