அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2024-03-09 03:50 GMT

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி சார்பில், ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து இஸ்திரி பெட்டி இட்லி பாத்திரம், தையல் இயந்திரம், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது. மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிமுக தலைமையகத்தில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் வருகை தந்தனர்.வாழை மரங்கள் , தென்னங் கீற்றுகளைக் கொண்டு எம்ஜிஆர் மாளிகை நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News