சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மகளிர் தின கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-09 09:52 GMT

மகளிர் தின கொண்டாடப்பட்டது 

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கல்லூரிக்கு வந்த அனைத்து பேராசிரியைகளையும், பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நடந்த விழாவுக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். துறையை சேர்ந்த பேராசிரியர்களின் கலைநிகழ்ச்சிகளும், பேராசிரியைகளுக்கும், அலுவலக பெண் ஊழியர்களுக்கும் சிறு சிறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

துறையை சேர்ந்த அனைத்து பெண் ஊழியர்களையும் கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. துறையின் இணை பேராசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறையின் பேராசிரியர்களும், ஆண் ஊழியர்களும் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News