மகளிர் உரிமைத்தொகை : ஜனவரி மாதம் முதல் விண்ணப்பங்கள்

மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-16 16:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில்,பேரூராட்சிகள் துறை மூலம் அம்ருத் 2.0 கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-2024 கீழ் ரூ.11 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோக பணிகள்,பேரூராட்சிக்கு பூங்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாயக்கூடம் உள்ளிட்டவை கட்ட அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது

.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,கிராமங்கள் தன்னிரைவு பெற அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்றும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வராமல் இருக்கும் ஊதியத்தை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாகவும்,மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள்,மேல்முறையீடு செய்துள்ளவர்களை தவிர்த்து,இதுவரை விண்ணப்பிக்காத புதியவர்களும் விண்ணங்களை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கலாம் என்றார்.

Tags:    

Similar News