பிப்.14ல் மகளிர் தொழில் முனைவோர் முகாம்
நாகப்பட்டினத்தில் மகளிர் தொழில் முனைவோருக்கான முகாம் வரும் 14ம் தேதியன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது" ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது.
நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டமானது நாகப்பட்டினம் மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் 53 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை "மதி சிறகுகள் தொழில் மையம்" மூலமாக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வழங்கி வருகிறது.
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்க்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே இடத்தில் பெற தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற 14.02.2024 தேதி புதன் கிழமை அன்று நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை வட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. ஆகவே நமது மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தொழில் கனவுகளை அடைய வேண்டும்.
தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும். இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு.இரா.வேல்முருகன் 8778228732, 04365-290033, செயல் அலுவலர் (ED) திருமதி. எஸ்.இளநங்கையரசி 755016937 மற்றும் வட்டார அணித்தலைவர், திரு.வி.செல்வமணி அவர்கள் 9566673516 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எண்221, இரண்டாம் தளம், என்ற முகவரியில் நேரிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள 09.02.2024 தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும், நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2024, காலை 10.00 முதல் 4.00 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எண்221, இரண்டாம் தளத்தில் நடைபெறும் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.