நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் கபடி போட்டி

ஆரல்வாய்மொழி குட் ஷெப்பர்ட் நற்பணி இயக்கம் சார்ப்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது

Update: 2023-12-25 07:01 GMT
மகளிர் கபடி போட்டியை துவக்கி வைத்த பாரதிய ஜனதா நிர்வாகி சகாயம் .
கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழி  குட் ஷெப்பர்ட் நற்பணி இயக்கம் நடத்திய கிறிஸ்துமஸ் விழா சி எஸ் ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு இரவு மாபெரும் மின்னொளி மகளிர் கபாடி போட்டி நடைபெற்றது.  போட்டியை தமிழக பா ஜ க மீனவர் பிரிவு மாநில செயலாளரும்,  பெருங்கோட்ட பொறுப்பாளருமான சகாயம்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட கபடி சங்க தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பல்வேறு அணிகள் மோதின. வெற்றியளார்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News