கருணை அடிப்படையில் பணி: அமைச்சர் சிவசங்கர் அறிவுரை
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த 49 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை லிமிடெட் மத்திய பணிமயைில் நடைபெறும் நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த 49 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை
அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் திரவ நிலை இயற்கை எரிவாய்வு (Liquid Natural Gas) மற்றும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு ( Compressed Natural Gas) மூலம் இயங்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் ஆறு பேருந்துகளின் இயக்கத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,
முதல்வர் அவர்களின் உத்தரவின்படி புதிய முயற்சிகளை எடுக்கும் விதமாக பரிச்சார்த்த முறையில் LNG இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்கள், போக்குவரத்து நிறுத்தங்கள் அறிவிக்கும் திட்டம், மாநகர போக்குவரத்து கழகத்தில் மின்னனு இயந்திரம் மூலம் பயணசீட்டு,சிசிடிவி, அவசரகால அழைப்பு பொத்தான் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. காற்றுமாசுபடுதலை தடுக்கும் விதமாக இயற்கை எரிவாயுவிற்கு செல்லும் முயற்சி எடுக்கப்படுகிறது.
இன்று இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திற்கும் எரிபொருள் மிச்சமாவதால் போக்குவரத்து கழகத்திற்கு பொருள் செலவு மிச்சமாகும். அரசிற்கு சில விதிமுறைகள் உள்ளது கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதற்கும் உள்ளது ஆகையால் காலிப்பணியிடங்கள் ஏற்படும் போது அவ்விதிகளுக்கு உட்பட்டு இடங்கள் நிரப்படுகிறது.
இதனை சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் பண்டிகை காலம் மட்டுமல்லாமல் தொடர் விடுமுறைகாலங்களிலும் கால நேரம் பார்க்காமல் போக்குவரத்து கழக ஊழியர்கள் பணி செய்வதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்க்கொள்கிறார்கள். சில ஊடகங்கள் திட்டமிட்டு பொய் செய்தி பரப்புகிறார்கள் ஆனால் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்து 40/40 வெற்றியினை கொடுத்துள்ளார்கள். ஆனால் செய்தியினை விட்டு விட்டு மீம்ஸ் போடுவதை போல செய்கிறார்கள் சில ஊடகங்கள்.
இத்துறையை சார்ந்த அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பணி மேற்க்கொள்ளும் போது இவ்வாறு செய்தி ஒளிப்பரப்பினால் அது அவர்களை மட்டுமல்ல அதில் பயணம் செய்யும் பயணிகளையும் சேர்த்துதான் தவறாக குறிப்பிடுவதாகும்.
பேருந்துகள் என்பது ஒரு இயந்திரம் ஒரு சில நேரங்களில் பழுதாகலாம் புதிதாக வாங்கிய கார் கூட பழுதாகலாம் ஆனால் ஏதோ ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பொதுவாக பேசுவது சரியல்ல. புதிய பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்கள் இது மக்களுக்கு சேவை செய்யும் துறை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.