வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பணி புறக்கணிப்பு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
Update: 2024-02-20 06:23 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு கோரியும் 19ஆம்தேதி தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் சார்பில் தமிழ்நாடு முழுதும் கருப்பு தினமாக அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கருப்பு தினத்தை கடைபிடித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் நேற்று சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் வழக்கறிஞர் சங்க செயலர் பவுன்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதி மன்ற வழக்கறிஞர்கள் அந்தோனி ரமேஷ், இளங்கோ, சுசில்குமார், சுரேஷ், வேணுகோபால், ராமச்சந்திரன், சுடலைமுத்து, முத்துராஜ், ஈஸ்டர் கமல், பிரின்ஸ், வசந்த், கௌதம் என 20 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 80 பேர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.