ஹச் புனித பயணம் மேற்கொள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

விருதுநகர் மாவட்டத்தில் ஹச் புனித பயணம் மேற்கொள்ள நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.;

Update: 2024-05-13 12:08 GMT

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக ஹச் புனித பயணம் மேற்கொள்ள நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தடுப்பூசி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஹச் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் அவர்கள் மதுரை வரவழைக்கப்பட்டு மதுரையில் மட்டுமே மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும். 

Advertisement

 தற்போது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஹச் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்த 57 நபர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சுகாதார பணிகள்  அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஹச் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்த 57 இஸ்லாமியர்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த சான்றிதழ் உள்ள நபர்கள் மட்டுமே ஹச் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர்

Tags:    

Similar News