மதுபோதையில் விஷம் அருந்தி தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் விஷமருந்தி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-11 08:29 GMT
தற்கொலை
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பூவன்கோடு, வலியபிலாங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (61). தொழிலாளியான இவருக்கு எமிலி (48) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு 30 ஆண்டுகளாக அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 7.ம் தேதியன்று இவர் மது போதை தலைக்கேறி ஏதோ விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி எமிலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News