இடுப்பு வலியால் தொழிலாளி தற்கொலை!
இடுப்பு வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 08:45 GMT
இடுப்பு வலியால் தொழிலாளி தற்கொலை!
கீரனூர் அருகே கில்லுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 42 தொழிலாளி. இவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டதால் வாழ்க்கையின் விரக்தி அடைந்த சுப்பிரமணி விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.