விஷம் குடித்து தொழிலாளி பலி!

ஆரணி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-04-05 13:50 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துப்பட்டு ரோடு துந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48), தொழிலாளி. இவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.இவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News