இரும்பு பெட்டி விழுந்து தொழிலாளி பலி!
தேசூர் அருகே கிணற்றில் தூர்வாரிய போது இரும்பு பெட்டி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
Update: 2024-04-29 08:14 GMT
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது. துலுக்கானம் (வயது 45), ஏகாம்பரம் (55) ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கி மண்ணை வாரிக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் மேல்பகுதியில் இருந்த இரும்பு பெட்டி அவர்கள் மீது விழுந்ததில் துலுக்கானம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஏகாம்பரம் காயத்துடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.