திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு.
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அன்ராயநல்லூர் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன் (வயது 50). தொழிலாளி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள வயல் வெளியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் முருகன் தனது மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் தெரியாமல் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின் சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ் பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக் டர்கள் மணிகண்டன், பாலசிங்கம் மற்றும் போலீ சார் முருகனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.