ஆரல்வாய்மொழியில் டெம்போ மோதி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் டெம்போ மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-19 04:44 GMT
விபத்தில் உயிரிழந்த ரத்தினராஜ்

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் ஈச்சங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரத்னராஜ் (53) இவர் முள் வேலி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவ தினம் இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த சந்திரன் என்பருடன் நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் ஒருவருக்கு முள்வேலி அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். குமாரபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த டெம்போ ஒன்று இவர்கள் பைக்கில் மோதியது.

Advertisement

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரத்தினராஜ் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் கன்னியாகுமாரி மகாதானபுரம் பகுதியை சேர்ந்த கிலோத் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News