கடையநல்லூா் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 11:03 GMT
கோப்பு படம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மங்களாபுரத்தைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் கோபால்(35). இவா் அச்சன்புதூரில் உள்ள வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வேலை செய்து வந்தாா்.
வியாழக்கிழமை பைக்கில் ஊருக்கு சென்றபோது, காசிதா்மம் அருகே பைக் நிலை தடுமாறி விழுந்ததில் கோபால் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.