சேலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2023-12-24 08:03 GMT
சேலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சத்யராஜ் (வயது 33). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் சத்யராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.