உலக எய்ட்ஸ் தினம் - கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.
Update: 2023-12-01 09:30 GMT
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக அங்கு அமைக்கப்பட்ட பேனரில் கையெழுத்து இயக்கம் துவங்குவதற்காக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தாமோதரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி, மாவட்ட காசநோய் பிரிவு அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களது கையெழுத்தை கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.