அரசு நடுநிலைப் பள்ளியில் உலகப் பை தினம் கொண்டாட்டம்
சங்ககிரி: தேவண்ணகவுண்டனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக பை தினம் கொண்டாட்டம்.;
Update: 2024-03-14 16:37 GMT
உலக பை தினம்
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டநூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக பை தினம் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. கணித பட்டதாரி ஆசிரியர் .முருகன் கணித குறியீடு பை என்பதன் விரிவாக்கமான 3.14 என்பதை குறிப்பிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14ஆம் தேதி உலக 'பை' தினமானது கொண்டாடப்படுகிறது. ' பை' குறியீடு குறித்தும் அதன் அளவுகளை பல்வேறு நாட்டு கணித அறிஞர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் என்பது குறித்தும் பரப்பளவு, கன அளவு கணக்கீடு செய்ய பையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.மேலும் கணினி பவர் பாயிண்ட் மூலமும் எடுத்துக்கூறினார். இதில் ஆசிரியை சித்ரா, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.