வனத்துறை சார்பில் உலக பல்லுயிர்ப் பெருக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில், உலக பல்லுயிர்ப் பெருக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 07:02 GMT
உலக பல்லுயிர்ப் பெருக்க நாள் விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில், உலக பல்லுயிர்ப் பெருக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்லுயிர்ப் பெருக்க நாளையொட்டி கட்டுரை, ஓவியம் மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் வேம்பு, மகாகனி, இலுப்பை உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம். சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.