உலக இரத்த கொடையாளர் தின பாராட்டு விழா
பொன்னமராவதியில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கா மருத்துவமனை,ஆராய்ச்சி மையத்தின் சார்பில் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.;
உலக இரத்த கொடையாளர் தின பாராட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஸ்ரீ துர்க்கா மருத்துவமனை,ஆராய்ச்சி மையத்தின் சார்பில் உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி குருதி கொடையாளர்களை பாராட்டி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பொன்னமராவதி ஸ்ரீ துர்க்கா மருத்துவமனை,ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற உலக இரத்த கொடையாளர் தின பாராட்டு விழாவிற்கு ஸ்ரீ துர்க்கா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அழகேசன் தலைமை தாங்கினார்.
டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.கல்லூரியின் முதல்வர் பாண்டிய ராஜா வாழ்த்துரை வழங்கினார்.பின்னர் தொடங்கிய குருதி கொடையாளர் பாராட்டு விழாவில் 50 க்கு மேற்பட்ட குருதி கொடையாளர்களுக்கு டாக்டர் அழகேசன் பாராட்டு நற்சான்றிதழை வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.இந்நிழவில் மருத்துவர்கள் செல்வக்குமார், ரஜினி,ஆய்வக நுட்புநர் ஆறுமுகம்,ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ராமன்,அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் பிரிஸ்ன் (எ)இளவரசு, அம்மருத்துவமனையின் செவிலியர்கள், அலுவலப்பணியளார்கள், குருதி கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.