உலக பூமி தினம் - குப்பைகளை அகற்றிய மாணவர்கள்
உலக பூமி தினத்தையொட்டி கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றிய தனியார் பள்ளி மாணவர்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தனியார் (மை ஸ்கூல் சத்ய சுரபி மேல்நிலை பள்ளி) பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு பூமியின் தனித்துவத்தையும் அதன் பன்முகத்தன்மையும் இந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பூமி தாய் அழுகிறாள் காப்பாற்றுங்கள், நாம் பூமியின் வாடகை வாசிகள் மட்டுமே அழிக்கவோ சுரண்டவோ நமக்கு உரிமை இல்லை என பதாகைகள் ஏந்தி வில்பட்டி பிரிவு முதல் அட்டுவம்பட்டி பகுதி வரை ஊர்வலமாக சென்றனர்,
மேலும் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பொது வெளியிலும் வனப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை வீச வேண்டாம், அதே போல மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து தாங்கள் தங்கியுள்ள தங்கும் விடுதிகளில் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர், மேலும் இந்த சாலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களால் வீசி எரியப்பட்ட குப்பைகளையும் அகற்றி , குப்பைகளை குப்பை தொட்டியில் தான் கட்டாயம் போட வேண்டும் குப்பை இல்லாத பூமியாக மாற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குறிப்பாக இந்த ஊர்வலத்தில் பசுமையாக பூமியை வைத்துக்கொள்ளுங்கள், பசுமையாக வைக்காவிடில் இயற்கை அழிந்து விடும் என்ற பதாகையினையும் காட்சி படுத்தி இருந்தது அனைவரையும் கவர்ந்தது...