உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2024-06-16 06:23 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. கல்லூரி பேரவை துணைத்தலைவர் ரகுபதி, உறுதிமொழி வாசிக்க, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Tags:    

Similar News