செம்பொற்ஜோதிநாதர் சிவன் கோவிலில் வழிபாடு
சாமியார்மடம் செம்பொற்ஜோதிநாதர் சிவன் கோவிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு நடந்தது.;
Update: 2023-12-26 04:59 GMT
செம்பொற்ஜோதிநாதர்
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் சிவன் கோவிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு பெண்களின் நற்பலன் வேண்டி நடந்து வருகிறது. அதிகாலையில் கோ-பூஜைக்குப்பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், திருவெண்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் பெண்கள் பொய்கையில் குளித்து கடவுளை வழிபடுவது நற்பலன்களை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையின்படி நடத்தப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.