பஜனை பாடல்கள் பாடி வழிபாடு
பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 10:17 GMT
பஜனை பாடியவர்கள்
பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் சீதா ராம பஜனை சமாஜம் சார்பில் 80 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் அதிகாலை முதல் 30க்கு மேற்பட்டவர்கள் அக்ரஹார வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்கின்றனர்.
அக்ரஹாரம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் துவங்கும் பஜனை பல்வேறு கீர்த்தனைகள் பாடல்கள் பாடியபடி அக்ரஹார தெருக்களில் வலம் வருவர். பஜனை குழுவினர் இசை வாத்யங்களை இசைத்தபடி கணபதி முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து பாடல்களும், திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட பாடல்களும் இதில் பாடல்கள் பாடி செல்வர்.மாத இறுதியில் ராதா மாதவ கல்யாணம் உற்ஸவம் நடந்தபின் பஜனை குழுவினர் பூர்த்தி செய்கின்றனர்.