பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யாக பூஜை

அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யாக பூஜை நடந்தது.

Update: 2024-06-15 08:19 GMT

 அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யாக பூஜை நடந்தது. 

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது.இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. வளர்பிறை அஷ்டமி தினமான இன்று கோவில் வளாகத்தில் மஹாலட்சுமி யாகம் நடைபெற்றது.

அஷ்டமி மஹாலட்சுமி யாகத்தில் கலந்து கொண்டால் இல்லாத.தில் செல்வம் கொழிக்கும் , குடும்ப உறுப்பினருக்கு ஆயுள் கூடும் என்பதால் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மூலவராக சொர்ணலிங்க பைரவருக்கு குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பொருட்களால் நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News