யானைமலை கிரீன் பவுண்டேஷனின் 169வது வார மரம் நடும் விழா

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் நடந்த 169வது வார மரம் நடும் விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளால் மகிழம், செர்ரி மரங்கள் நடப்பட்டது.

Update: 2024-07-01 05:01 GMT

 யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 169 ஆவது வார நிகழ்வாக மரம் நடும் விழா மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பள்ளி எதிரில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். நரசிங்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரசன்னா முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார் . சிறப்பு விருந்தினராக நேத்ராவதி வலி நிவாரண மையம் மற்றும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் டாக்டர் பாலகுருசாமி  கலந்து கொண்டு மரங்களின் தேவை, காலநிலை, இயற்கை, உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தி தனது வாழ்த்துக்களை வழங்கினார்.

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக டாக்டர் பாலகுருசாமிக்கு 'ஏழைகளின் மருத்துவர் விருது ' வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான மகிழம், செர்ரி மரங்களை, அதற்கு தேவையான வலைகளை அபாகஸ் ஆசிரியை மலர்விழி வழங்கினார். விழாவில் அன்ன வயல் காளிமுத்து விதைத் திருவிழா அழைப்பிதழ் மற்றும் வல்லாரை கீரைகளை பரிசாக வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மகிழம், செர்ரி மரங்கள் நடப்பட்டது.

கே ஏ எஸ் சேகர் வளர்மதி அறக்கட்டளை நிறுவனர் ராணி, அசோக்குமார், செல்வி, நவீன், மணிகண்டன் ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், பசுமை சாம்பியன் அசோக்குமார், மாற்றம் தேடி நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், தென்னிந்திய இயற்கை விவசாயிகள் சங்கச் செயலாளர் ரமேஷ், மற்றும் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, பிரபு சமூக ஆர்வலர்கள் பரமேஸ்வரன், செல்வி, ஸ்டெல்லா மேரி, பாலமுருகன், அறிவழகன், சசிகுமார், ரமேஷ், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி கோபிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News