ஏற்காடு கோடை விழாவையொட்டி நாய்கள் கண்காட்சி

ஏற்காடு கோடை விழாவையொட்டி நடந்த நாய்கள் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Update: 2024-05-26 02:50 GMT

 நாய்கள் கண்காட்சி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 47-வது கோடை விழா- மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. அண்ணா பூங்காவில் சுமார் 5 லட்சம் வண்ண மலர்களை கொண்டு பிரமாண்ட காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களான பவளப்பாறை, நண்டு, சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கோடை விழாவின் 4-ம் நாளான நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேடன், டாபர் மேன், பக், பொமரேனியன், லேப்ராடர், கோல்டன் ரிட்ரிவர், டெரியர், காக்கர் ஸ்பேனியல் போன்ற வெளிநாட்டு ரக நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை என பல்வேறு ரகங்களில் மொத்தம் 64 நாய்கள் கலந்து கொண்டன. ஒவ்வொரு வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதுதவிர, மாவட்ட காவல்துறை, மாநகர காவல்துறை, சேலம் ெரயில்வே போலீஸ், மத்திய சிறைத்துறை சார்பில் கலந்து கொண்ட மோப்ப நாய்கள் மற்றும் துப்பறியும் நாய்களின் சிறப்பு சாகச நிகழ்ச்சிகளும், சிறப்பு செயல்விளக்க காட்சிகளும் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News