யோகாசனம்: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறையில் பல்வேறு ஆசனங்களில் கின்னஸ், தேசிய சாதனை படைத்தவர்களுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி, போலீஸ் ஐஜி., ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மஹாமகரிஷி அறக்கட்டளையின் மஹாயோகம் என்ற அமைப்பு காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பாக யோகாசம் மற்றும் ஆற்றல் மருத்துவம் என்ற மருத்துவ ரீதியான யோகா வழிமுறை மற்றும் ஜென்ஸ்கர் குணப்படுத்தும் தற்காப்புகலையை வடிவமைத்து கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, யோகாவில் 6 கின்னஸ் உலக சாதனையும், 5 தேசிய சாதனையும் புரிந்துள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பகுதியில் அனைவரின் ஆரோக்கியத்திற்கான உடல் நலம், மன நலம், அதன் அவசியம், குழந்ததைகளின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பல ஊர்களில் ஆசனங்களில் கின்னஸ், தேசிய சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. குருபாதம் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதி மன்ற நீதியரசர் சுவாமிநாதன், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி லலிதா லட்சுமி (IPS) ஆகியோர் கலந்து கொண்டு யோகாசனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பல ஊர்களில் நடைபெற்ற சாதனைகளான , 162 மணி நேரம் 31நிமிடம் 4 நொடி தூங்காமல் இடைவிடாமல் உணவு உட்கொள்ளாமல் பல்வேறு ஆசனங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்த ரஞ்சனா, பல்வேறு ஆசனங்களை செய்தபடியே 138 மணி நேரம் மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்த ஜெகதீசன் என்பவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதே போல் 2023-ஆம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவர்கள் 854 மாணவர் கட்டாவுடன் கூடிய வீர பத்ராசன்னா முறைகளை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக செய்து கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் 2 சாதனைகளை படைத்தனர். இவர்களில் 30 மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்பு மாணவர்கள் யோகா ஆசனம், சிலம்பாட்டம், நான்ஜக் சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.