சேலம் சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலி
சேலம் அருகே சாலை தடுப்பில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:42 GMT
கோப்பு படம்
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி முயல்நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுகேந்திரன் (22). இவர் நேற்றிரவு 10மணி அளவில் ஜங்ஷன் பகுதியில் இருந்து தனது நண்பர்கள் நவீன்குமார் (14), டேவிட்குமார் (16) ஆகியோருடன் ஒரே பைக்கில் பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
5 ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தின் வழியாக வந்தபோது, பாலம் இறங்கும் சொர்ணபுரி பகுதியில் சாலையோர தடுப்பில் பைக் மோதியது. இதில் 3பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவ்வழியாக வந்தவர்கள் 3பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யுகேந்திரன் உயிர் இழந்தார். மற்ற 2பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.