“இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு

“இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

Update: 2023-12-18 16:02 GMT

“இளம் வடிவமைப்பாளர் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு அரசு இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக மாநில அளவிலான சிறந்த “இளம் வடிவமைப்பாளர் விருது” வழங்கும் பொருட்டு சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வடிவமைப்பாளர்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.1,00,000/-, ரூ.75,000/- மற்றும் ரூ.50,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேற்டி விருதுக்கான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம், தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விபரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் காணலாம். வடிவமைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட 10.12.2023ம் தேதி, தற்போது 31.12.2023 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வடிவமைப்புகளை 31.12.2023 தேதிக்கு முன், உதவி இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகம், கைத்தறி துறை, (திருச்செங்கோடு சரகம்), ஈ.காட்டூர், எலந்தகுட்டை அஞ்சல்-638 008 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9750044550 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News