சொட்டவனம்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அடுத்த சொட்டவனம் கிராமத்தை சேர்ந்த விக்ரம் மனைவி அபிநயா. விக்ரம் அடிக்கடி மது குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிநயா கடந்த 28 ஆம் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் அபிநயா வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அபிநயா உடலில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதையடுத்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கம்மாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.