ஆலங்குடி அருகே இளம்பெண் மாயம்!
ஆலங்குடி அருகே இளம்பெண் மாயம். போலீசார் விசாரணை.;
Update: 2024-04-08 16:29 GMT
இளம்பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்தவர் வீரமணி மகள் பவித்ரா(23). அதே பகுதியில் உள்ள டைலர் கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பவித்ரா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதேபோல், பாத்தம்பட்டி காலனியை சேர்ந்த அன்புராஜா(29) என்பவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதுதொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமயம் தாலுகா கழனிவாசலை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.