இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை!
தூசி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-23 16:03 GMT
இளம்பெண் மாயம்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள கணினி பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.இந்த நிலையில் கணினி பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.