இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு முகாம் !
இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு முகாம் அமிர்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 09:44 GMT
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து இளம் வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான SVEEP செயல்பாடு குறித்து கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் அருகே இறச்ச குளம் அமிர்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மகளிர்திட்ட இயக்குநர் பீபி ஜாண், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர் சொர்ணபிரதாபன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தேர்தல் நேரத்தில் விதிமுறை மீறல்கள் நடைபெறுவதை C VIGIL app மூலம் பதிவு செய்து அனுப்ப மாணவர்களிடையே செயல் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் அனுப்பப்படும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து நண்பர்கள் உறவினர்கள் பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவது, அச்சமின்றி வாக்களிப்பது என வாக்காளர் உறுதிமொழியும் மேற்கொள்ளப்பட்டது.