இளம்பெண் தற்கொலை

தூசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-05 13:26 GMT

தற்கொலை 

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு சத்யபிரியா (வயது 25) என்ற மகளும், பரமானந்தம் (17) என்ற மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து எழிலரசி தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சத்யபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூசி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News