இளம் பெண் மாயம் - கணவன் புகார் !

திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த பெண் மாயமான நிலையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-30 10:54 GMT

காவல்துறை

திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே! இளம் பெண் மாயம். கணவன் புகார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சரவணன் வயது 24. இவருக்கும் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சின்னசேங்கல் பகுதியைச் சேர்ந்த எழில்மதி வயது 22 என்ற பெண்ணுக்கும் கடந்த 2021 ஏப்ரல் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் எழுந்த மன வருத்தத்தில் மார்ச் 28ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் எழில்மதி திருச்சி சென்று வருவதாக சென்றவர்,வீடு திரும்பவில்லை. எழில் மதி வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களது உறவினர்கள் வீட்டில் விசாரித்துப் பார்த்தும் எழில் மதி குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால் இது குறித்து தனது மனைவியை காணவில்லை என சரவணன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான எழில்மதியை தேடி வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News