முசிறி அருகே இளம் பெண் திடீர் மாயம். காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேலகொட்டம் பகுதியில் வீட்டிலிருந்து இளம்பெண் திடீரென மாயமானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 10:09 GMT
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேலக்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான இளம்பெண்.பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிந்து வந்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென மாயமானர். அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் இளம் பெண் கிடைக்கவில்லை.
இது குறித்து இளம்பெண்ணின் தந்தை ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.