பள்ளப்பட்டி அருகே 20 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது
பள்ளப்பட்டி அருகே 20 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.;
காவல் நிலையம்
பள்ளப்பட்டி அருகே 20 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, மின்வாரிய அலுவலகம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் மின்வாரிய அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பள்ளப்பட்டி கடைவீதி பகுதியைச் சேர்ந்த யாசர் அராபத் 21 என்ற இளைஞர், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 200 மதிப்புள்ள 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.