மின்சாதனப் பொருட்களை திருடிய வாலிபர் கைது !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மின்சாதனப் பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-19 04:45 GMT

கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஆனந்த் (38). மீன்பிடித் தொழிலாளியான இவர் குளச்சல் கடற்கரை சந்திப்பில் புதிதாக கடை கட்டி வருகிறார். இதற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி அப்பகுதியில் வைத்திருந்தார்.       இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர் ரூபாய் 4 ஆயிரம்  மதிப்புள்ள மின்சாதன பொருட்களை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ஆனந்த் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நெய்யூர் முரசம்கோடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் (19) என்பவர் மின்சாதன பொருட்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது. மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News