இரவு நேரத்தில் ஆட்டை திருடிய இளைஞன் கைது

இரவு நேரத்தில் ஆட்டை திருடிய இளைஞன் கைது. காவல்துறை நடவடிக்கை.

Update: 2024-02-14 10:34 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் வயது 70. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டின் அருகாமையில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் மறுநாள் காலை 5:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை ஒருவர் களவாடி சென்று விட்டார். மறுநாள் காலை தனது ஆட்டை மேய்ச்சலுக்கு அனுப்ப சென்ற போது, ஒரு ஆடு காணாதது கண்டு குப்பண்ணன் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் தனது ஆட்டை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் சாரதி வயது 19 என்பவர் இந்த ஆட்டை திருடியதை கண்டுபிடித்தனர். திருடிய ஆட்டின் மதிப்பு ரூபாய் 2000 இருக்கும் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக சாரதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சாரதி மீது ஏற்கனவே வெள்ளியணை காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News